தோல்வியை ஏற்றுக் கொண்ட சஜித்: கட்சிப் பதவியிலிருந்தும் விலகல்! - sonakar.com

Post Top Ad

Sunday, 17 November 2019

தோல்வியை ஏற்றுக் கொண்ட சஜித்: கட்சிப் பதவியிலிருந்தும் விலகல்!



நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைந்து விட்டதாக ஏற்றுக்கொண்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.



கோட்டாபே ராஜபக்சவின் குடியுரிமை விவகாரம் தொடர்ந்தும் பல சந்தேகங்களை உருவாக்கியுள்ள போதிலும் தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளமை ஐக்கிய தேசியக் கட்சியினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் பலர் விரைவில் இராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன் எதிர்வரும் வாரம் புதிய அமைச்சரவை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment