பாதுகாப்பு தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்: கமல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 November 2019

பாதுகாப்பு தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்: கமல்


நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விழிப்புடன் இருக்குமாறு பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன.

ஆட்சி மாற்றத்தின் பின், ஆட்கடத்தல், அரசியல் பழிவாங்கல் நிகழ்வுகள் ஆங்காங்கு நிகழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் பிராந்திய பொலிசாரின் கவனம் அவசியப்படுவதாக வலியுறுத்தியுள்ள அவர், பொலிஸ் உயரதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அனைத்தின மக்களும் இன-மத பேதமின்றியும் அச்சமின் வாழக்கூடியதுமான சூழலை உருவாக்க வேண்டியது பொலிசாரின் கடமையென அவர் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment