மேலும் பல சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் 'பொது மன்னிப்பு' - sonakar.com

Post Top Ad

Thursday, 14 November 2019

மேலும் பல சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் 'பொது மன்னிப்பு'


கொலை, கொள்ளை, போதைப் பொருள், பாலியல் வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பாரிய குற்றங்களன்றி சிறு குற்றங்களுக்காகச் சிறைவாசம் அனுபவித்து வரும் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் ஒரு தொகையினருக்கு (284) ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிக்கிறது.

இதேவேளை, ரோயல் பார்க் கொலை மரணதண்டனைக் கைதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதையடுத்து ஆறு மரண தண்டனைக் கைதிகள் தமக்கும் மன்னிப்பு கோரி போராட்டத்தை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment