
நவம்பர் 16ம் திகதி தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் புதிய அமைச்சரவையொன்றில் ஒவ்வொரு விடயத்திலும் தெளிவானதும் நேர்மையான ஈடுபாடும் கொண்ட ஒருவரையே தாம் நியமிக்கப் போவதால தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
ஏலவே பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பினை சரத் பொன்சேகாவுக்கு வழங்கப் போவதாக தெரிவித்துள்ள அவர், ஊழல் விவகாரங்களைக் கையாளும் பொறுப்புள்ள அமைச்சு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்படும் என நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
தமது கட்சிக்காரர்கள் உட்பட ராஜபக்ச அரசின் ஊழல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக ரஞ்சன் ராமநாயக்க குரல் கொடுத்து வந்ததுடன் பல்வேறு முறைப்பாடுகளையும் செய்து வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment