ராஜபக்சக்கள் எல்லோரும் மாத்தறையில் பிறந்தவர்கள்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Thursday, 14 November 2019

ராஜபக்சக்கள் எல்லோரும் மாத்தறையில் பிறந்தவர்கள்: மஹிந்த


அமெரிக்க குடியுரிமை விவகாரம் தொடர்ந்தும் பாரிய இழுபறியாகியுள்ளதுடன் அதனை ஐயமறத் தெளிவுபடுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளார் கோட்டாபே ராஜபக்ச. இந்நிலையில், தான் அமெரிக்காவில் பிறக்கவில்லை, மாத்தறையிலேயே பிறந்தவன் என நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதி பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.அதற்குப் பலம் சேர்க்கும் விதமாக தனதுரையின் போது ராஜபக்சக்கள் அனைவருமே மாத்தறையிலேயே பிறந்தவர்கள், யாரும் அமெரிக்காவில் பிறக்கவில்லையென தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க பிரஜைகளான தனது மனைவி - மகனின் வாக்கு கூட துர்ப்பாக்கியசாலி கோட்டாபே என ரஞ்சன் ராமநாயக்க தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment