காலையில் 69 தேர்தல் விதி மீறல்கள்; பெரமுனவால் 49 - sonakar.com

Post Top Ad

Saturday, 16 November 2019

காலையில் 69 தேர்தல் விதி மீறல்கள்; பெரமுனவால் 49


இன்று காலை 10 மணிவரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 69 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் 49 கோட்டாபே ராஜபக்சவின் பெரமுனவினரால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சஜித்தின் புதிய ஜனநாயக முன்னணியினர் 14 விதி மீறல்களிலும் தேசிய மக்கள் சக்தி 1 விதி மீறலிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக பிரச்சாரம் செய்வதே அதிகம் இடம்பெற்றிருப்பதோடு அநுராதபுர மற்றும் மாத்தறை மாவட்டங்களே இதுவரையான விதி மீறல்களில் முன்னிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

படத்தில் காணப்படும் வாகனத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment