பேருவளை சு.க அமைப்பாளர் அம்ஜத் சஜித்தோடு இணைவு - sonakar.com

Post Top Ad

Wednesday 16 October 2019

பேருவளை சு.க அமைப்பாளர் அம்ஜத் சஜித்தோடு இணைவு


பேருவளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.எம். அம்ஜத் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.சஜித் பிரேமதாசவின் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்து வரும் திஸ்ஸ அத்தநாயக்க, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோர் முன்னிலையில் இணைந்து கொண்டுள்ள அவர் சஜித்தின் வெற்றிக்காக உழைக்கப் போவதாக தெரிவிக்கிறார்.

தமது ஆதரவாளர்கள் சகிதமே தாம் இணைந்துள்ளதாகவும் இன்னும் பலர் இவ்வாறு சஜித்தோடு கைகோர்க்கவுள்ளதாகவும் அம்ஜத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment