எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் எதுவித முறைகேடுகளும் சர்ச்சையுமின்றி இடம்பெற்றிருந்ததன் பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் மக்களிடம் ஆர்வம் அதிகரித்திருக்கும் எனத் தான் நம்புவதாக தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
இப்பின்னணியில் 80 வீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவை தான் எதிர்பார்ப்பதாகவும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வத்துடன் விமானப் பயணங்களை ஏற்பாடு செய்து வருவது தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று வரை 670 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment