பதவிக் காலம் முடிந்த பின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்ந்தும் கொழும்பு 7ல் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தைப் பயன்படுத்துவதற்கும் அவருக்கு விசேட பாதுகாப்பு படையினரோடான பாதுகாப்பு வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன் வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே இவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில் மைத்ரிபால சிறிசேன நாட்டுக்குச் செய்த சேவையை மதிக்கும் முகமாக இவ்வாறு அவரை கௌரவிக்க வேண்டும் என மங்கள தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment