உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர் மற்றும் இரவணா பலய கடும்போக்குவாதிகள் உட்ப பௌத்த துறவிகள் கோட்டாபே ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்கு ஆதரவளிக்கப் போவதாக இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக நிகழ்வில் கலந்து கொண்டு தேரர்களிடம் கோட்டாபே ராஜபக்ச ஆசீர்வாதம் பெற்றிருந்த அதேவேளை மார்ச் 12 அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி வேட்பாளர்களுடனான திறந்த கலந்துரையாடலை அவர் புறக்கணித்திருந்தார்.
கோட்டாபே ராஜபக்சவே இனக் காவலர் எனவும் அவரை வெற்றி பெறச் செய்ய முடியாவடின் காவியுடை அணிவதில் பலனில்லையெனவும் இங்கு இராவணா பலய சத்தாதிஸ்ஸ தெரிவித்திந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment