பத்தாவது நாளாக தொடரும் ரயில்வே பகிஷ்கரிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 5 October 2019

பத்தாவது நாளாக தொடரும் ரயில்வே பகிஷ்கரிப்பு


ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கிய பின்னரும் அதனைக் கவனத்திற் கொள்ளாது ரயில்வே தொழிற் சங்கங்கள்  இன்றுடன்  10வது நாளாகவும் தொடர்ந்தும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


போக்குவரத்து அமைச்சருடனான நேரடி பேச்சுவார்த்தைகள் ஊடாக பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் ரயில் நிலையங்கள் வெறிச்சோடிப் போயுள்ளதுடன் பொது மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு சில ரயில் சேவைகள் இயங்குகின்ற போதிலும் முழுமையான சேவை வழமைக்குத் திரும்பாத நிலையில் ரயில்வே ஊழியர்களின் செயற்பாடு தொடர்பில் பொது மக்கள் கண்டனம் வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment