தீவிரவாத செயற்பாடுள்ளவர்களை இனி வரும் காலங்களில் முஸ்லிம்களே பிடித்துக் கொடுப்பார்கள், அதற்கு பொலிஸ், இராணுவம், உளவுத்துறை என எந்த அவசியமும் இல்லையென தெரிவிக்கிறார் மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம்.
நேற்றைய தினம் வத்தேகமயில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை வெளியானதும் பல உண்மைகள் வெளிவரும் எனவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், முஸ்லிம் சமூகம் விழிப்புடன் இருப்பதாகவும் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு மக்களை பிடித்துக் கொடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளமையும் தற்போது முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒருவருக்கு ஒருவர் காட்டிக் கொடுக்கும் போராட்டம் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment