பிக்குகளை ஒன்றிணைத்து புதிய 'சக்தி' அமைக்கும் ரதன தேரர் - sonakar.com

Post Top Ad

Wednesday 2 October 2019

பிக்குகளை ஒன்றிணைத்து புதிய 'சக்தி' அமைக்கும் ரதன தேரர்


தேசிய அளவில் புத்த பிக்குகளின் அமைப்புகளை ஒன்றிணைத்து 'விஜயதரணி' எனும் பெயரில் கூட்டமைப்பொன்றை ஆரம்பிப்பதாக தெரிவிக்கிறார் அத்துராலியே ரதன தேரர்.தேசிய செயற்திட்டம் ஒன்றின் அடிப்படையிலேயே இலங்கையில் எதிர்காலத்தை முன்னெடுக்க முடியும் எனவும் அதற்கு பிக்குகளின் ஒற்றுமை அவசியம் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

சிறுபான்மை இனங்களைத் திருப்திப்படுத்த தேசிய அரசியல் மற்றும் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதே இன்றைய நிலையாக இருப்பதாகவும் அதிலிருந்து விடிவு தேவையெனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment