தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட முற்பணம் 200 கோடி ரூபாயை பெற்ற பின் காணாமல் போனதாக ஜனாதிபதி கூறிய அலிட் நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதாக தெரிவிக்கிறார் மஹிந்த அரசில் முக்கிய பதவிகளை வகித்த அனுஷ பல்பிட்ட.
அவரது கூற்றின்படி, குறித்த நிறுவனத்துடன் சீனா சென்று இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துரையாடல், சந்திப்புகளில் ஈடுபட்டதாகவும் முறையான தேடலின் பின்னரே பணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.
எனினும், 2012ல் பணம் பெற்ற குறித்த நிறுவனம் 2015ல் தாமரை கோபுர நிர்மாண முறைகேடுகள் பற்றிய விசாரணையின் போது இல்லாமல் போயிருந்ததாக ஜனாதிபதி நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை யும் சில் ஆடைகள் ஊழலில் அனுஷவுக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment