கோட்டே பங்களா சந்தியிலிருந்து தெஹிவளை பகுதிக்குள் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கு உலகிலேயே அதி பயங்கரமான இஸ்லாமிய அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாக தெரிவிக்கிறார் ஞானசார.
வஹாபிசம் - இஹ்வானிசம் என பல்வேறு வழி முறைகளைக் கொண்டு இங்குள்ள முஸ்லிம் இளைஞர் சமுதாயம் மூளைச் சலவை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்ற அவர், அயலவர்கள் - அவர்களது நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பதுடன் தகவல்களை சேகரித்து அபாயங்களைத் தடுக்க வேண்டும் எனவும் ஞானசார பொதுபல சேனாவின் இளைஞர் மாநாட்டில் வைத்து தெரிவித்துள்ளார்.
இன்னுமொரு ஈஸ்டர் தாக்குதலை யாரும் விரும்பவில்லையென்பதால் முஸ்லிம் அல்லாதோர் இது தொடர்பில் கவனமெடுத்து செயற்பட வேண்டும் எனவும் ஞானசார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment