ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை, சஜித் பிரேமதாசவுக்கு சார்பான முடிவொன்றை எட்டவில்லையானால் மாற்று வழி நாடப்படும் என தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.
இவ்வாரத்திற்குள் இவ்விடயத்திற்கு தீர்வொன்றை அறிவித்தாக வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதுடன் கூட்டணி கட்சிகளும் சஜித்தை ஆதரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன.
எனினும், கட்சித் தலைமை தொடர்ந்தும் மௌனமாயிருப்பது குறித்து சஜித் ஆதரவாளர்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே ஹரின் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment