பாகிஸ்தான் செல்ல மறுப்பதில் இந்திய தலையீடில்லை: ஹரின் - sonakar.com

Post Top Ad

Wednesday 11 September 2019

பாகிஸ்தான் செல்ல மறுப்பதில் இந்திய தலையீடில்லை: ஹரின்


பாகிஸ்தானில் இடம்பெற ஏற்பாடாகியுள்ள கிரிக்கட் போட்டியில் பங்கேற்க இலங்கையின் முன்னணி வீரர்கள் சிலர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்திய தலையீடே அதற்குக் காரணம் என அந்நாட்டின் அமைச்சர் பவாத் ஹுசைன் தெரிவித்திருந்தார்.இந்திய பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்க விடமாட்டோம் என இந்தியா மிரட்டியதன் காரணத்தினாலேயே லசித் மலிங்க உட்பட முக்கிய வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள மறுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், அதனை மறுத்துள்ள ஹரின், 2009ல் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் அச்சத்திலேயே சிலர் பங்கேற்ற மறுத்துள்ளதாகவும் அதற்குப் பதிலாக பங்கேற்க விரும்பம் உள்ளவர்களைக் கொண்டு பலமான அணியொன்று பாகிஸ்தான் செல்லவுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளதோடு இந்திய தலையீடு எதுவும் இல்லையென தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment