கைதான JMI உறுப்பினர்கள் TIDயிடம் ஒப்படைப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 11 September 2019

கைதான JMI உறுப்பினர்கள் TIDயிடம் ஒப்படைப்புஈஸ்டர் தாக்குதலையடுத்து இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் எனும் அமைப்பினைச் சேர்ந்த 11 சந்தேக நபர்கள் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.சஹ்ரானுடையே தேசிய தௌஹீத் ஜமாத்துடன் இணைந்து தாக்குதல்களை நடாத்தியதாகக் கருதப்படும் இவ்வியக்கம் பிறிதாக இயங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே தற்போது சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இதேவேளை அண்மையில் கைது செய்யப்பட்ட ஜமாத்தே இஸ்லாமி முன்னாள் அமீரும் இவ்வாறே பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment