ஹேமா - ரணில் தொலைபேசியில் கலந்துரையாடல் - sonakar.com

Post Top Ad

Wednesday 11 September 2019

ஹேமா - ரணில் தொலைபேசியில் கலந்துரையாடல்


முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியாரும் சஜித் பிரேமதாசவின் தாயாருமான திருமதி ஹேமா பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை முன்நிறுத்தி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம் ஒன்றை வெளியிடுவதில் தொடர்ந்தும் தாமதம் நிலவி வருகிறது.

நேற்றைய தினம் சஜித் - ரணில் இடையே இடம்பெற்ற சந்திப்பும் முடிவெதுவும் இன்றி நிறைவுற்றுள்ள அதேவேளை சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் பாதையை விட்டு விலகப் போவதில்லையென ஹேமா தரப்பிலிருந்து ரணிலுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நேற்றயை சந்திப்பு சுமுகமாகவே முடிந்ததாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் ஹரின் பெர்னான்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment