ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பங்காளிக் கட்சிகளும் கலந்து கொள்ளும் பாரிய பொதுக் கூட்டம் ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி காலி முகத்திடலில் ஏற்பாடாகியுள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்களையும் திரட்டி பாரிய பொதுக் கூட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக கயந்த தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சஜித் பிரேமதாச அங்கும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment