கிரிந்தயில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை: பெரமுன MP - sonakar.com

Post Top Ad

Saturday 28 September 2019

கிரிந்தயில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை: பெரமுன MPமாத்தறை, ஹக்மன - கிரிந்த பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றது தனி நபர் பிரச்சினையேயன்றி சிங்கள - முஸ்லிம் இன முறுகல் இல்லையென தெரிவிக்கிறார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர.


இரு தினங்களாக நீடித்த முறுகலின் பின்னணியில் நேற்றைய தினம் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் வீடுகள் சிலவற்றின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் அங்கு இன வன்முறை பதற்றம் நிலவியிருந்தது.

இந்நிலையில், பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த அதேவேளை, தொடர்ந்தும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இப்பகுதியில் நேற்றைய தினம் இனவாதத்தைத் தூண்டியது காஞ்சனவே என பிரதேசத்தின் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த பொதுநலவாதிகளும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment