சஜித் பிரேமதாச சிறந்த, எவ்வித அப்பழுக்குமற்ற செயற்பாட்டாளர் என புகழாரம் சூட்டியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
பொலன்நறுவயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு அவர் தெரிவித்திருந்த அதேவேளை தனது அமைச்சில் இருக்கக் கூடிய தடங்கல்களையும் தாண்டி, மக்களுக்கான நலத் திட்டங்களை அவர் முன்னெடுத்த சிறந்த அரசியல்வாதியென தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மைத்ரிபால சிறிசேன சுயாதீனமாக இயங்க முடியாது அவரது காலைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தவர்களே இன்று சஜித் பிரேமதாசவையும் ஜனாதிபதி வேட்பாளராக விடாமல் தடுப்பதாக வசந்த சேனாநாயக்கவும் அங்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment