அருவக்காடு சென்ற குப்பை லொறிகள் மீது கல்லெறிந்த மூவர் கைது! - sonakar.com

Post Top Ad

Monday 19 August 2019

அருவக்காடு சென்ற குப்பை லொறிகள் மீது கல்லெறிந்த மூவர் கைது!


நீண்டகாலமாக நிலவி வரும் பிரதேச மக்களின் எதிர்ப்பையும் மீறி தற்போது கொழும்பிலிருந்து குப்பைகள் அருவக்காடு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை குப்பை லொறிகள் மீது கல்லெறிந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு - மன்னார் வீதியில் அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சந்தேக நபர்களைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு கொழும்பிலிருந்து குப்பைகள் கொண்டு செல்லப்படுவதற்கு எதிரான போராட்ட தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment