முஸ்லிம்களை வேறுபடுத்த அனுமதிக்க மாட்டோம்: ரணில் - sonakar.com

Post Top Ad

Sunday 18 August 2019

முஸ்லிம்களை வேறுபடுத்த அனுமதிக்க மாட்டோம்: ரணில்சிங்கள அரசர்களை பாதுகாத்து நம்பிக்கையை வென்ற இலங்கை  முஸ்லிம்களுக்கு நீண்ட வரலாறுகள் உள்ளன. அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில்  முஸ்லிம்களைப் பற்றி  அவர்களுடைய பாதுகாப்பு விடயத்தில் மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். அந்த நம்பிக்கையை இலங்கையர் என்ற வகையில் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து கட்டி எழுப்ப வேண்டும். எனினும் அரசியல் நோக்கத்திற்காக முஸ்லிம்களை வேறுபடுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து அதை தோல்வியடையச் செய்வோம் என்று பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


பறகஹதெனிய தேசிய பாடசாலையில் 12 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு கட்டிடத் தொகுதிகளும் மாணவர்களின் பாவனைக்காக பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களினால் திறந்து கையளிக்கும் வைபவம் அதிபர் சபருல்லாக்கான் தலைமையில் இடம்பெற்றது. அவர் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்:

உண்மையிலேயே பறகஹதெனிய ஒரு பழைமைவாய்ந்த கிராமம்.  அரசர்கள் முஸ்லிம் மக்கள் வெளிநாடுகளில் இருந்து வந்த சமயங்களில் இங்கே அழைத்து வந்து குயேற்றினர். சிங்கள அரசர்கள் பறகஹதெனியவில் முஸ்லி;களைக் குடியேற்றியதற்கான காரணம் கலகெதரைக்குச் செல்லும் வீதியை பாதுகாப்பதற்காகும். அதே போன்று கலதெதர கிராமத்திலும் முஸ்லிம் கிராமங்கள் தோற்றம் பெற்றன. சிங்கள அரசர்கள் மத்தியில்  முஸ்லிம்கள் எந்தவிதமான பிரச்சினைகளுமின்றி சிங்கள அரசர்களைப் பாதுகாப்பார்கள்  என்ற மிகுந்த நம்பிக்கையிருந்தது. 1815 ஆண்டில் இடம்பெற்ற கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கூட எந்த முஸ்லிமும் கையொப்பம் இடவும் இல்லை. சம்மந்தப்படவும் இல்லை. அந்த வகையில்  பழைமைவாய்ந்த வரலாறு ஒன்று இருக்கிறது. அந்தப் பாதையினை  நாம் முன்னேற்ற வேண்டும்.

தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம்களை வேறுபடுத்தி சிலர் முயற்சி செய்கின்றனர். எந்த சமயத்திலும் எந்தக் குழுவிலும் பிழைகள் செய்கின்ற மரணிக்கின்ற அடிப்படைவாதிகள் இருக்கின்றார்கள். அதை தடுக்க முடியாது. அவற்றை தெரிந்து கொண்டு தான் அதை இல்லாமற் செய்ய முடியும்.

சிங்கள அரசர்கள் அனைத்து மக்களும்; பாதுகாப்பு வழங்கினார்கள். எல்லோரும் ஒன்றிணைந்து நாம் இலங்கையர் என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் நாம் முகம் கொடுத்து அதனை தோல்வியடையச் செய்ய வேண்டும்.

பறகஹதெனிய பாடசாலைக்கு வரும் போது விசேடமாக கல்வி அபிவிருத்தி தொடர்பாக  கூடுதல் கவனம் செலுத்தி கல்வி மட்டத்தை அதிகரிக்க வே;ண்டும் என்று தெரிவித்திருந்தேன். பாடசாலை வளங்கள் கட்டிடங்கள் வழங்கினாலும் கல்வி மட்டத்தை அடைந்து கொள்ள முடியாது என அப்பொழுது தெரிவித்தேன். இன்று நான் வரும் போது கட்டிட வளங்களும் கிடைக்கப் பெற்று கல்வி மட்டமும் முன்னேற்ம் கண்டுள்ளது என்று கூற விரும்புகின்றேன். வைத்தியத் துறைக்கும் பொறியயியல் துறைக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்ப்ட்டுள்ளனர். நாங்கள் இவை பற்றி எல்லோரும் பெருமைப்பட வேண்டும். அதற்காக அயராது உழைத்த ஆசிரியர் குழாத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இனிவரும் காலங்களில் இப்பாடசாலையில்  கல்வி வளர்ச்சி; தொகை அதிகரிக்குமே தவிர குறையாது. தற்போது இருக்க வேண்டி நடவடிக்கைகள் இவையே. 12 கோடி பெறுமதியான  பாடசாலைக்கான கட்டிடங்கள் திறந்து வைக்கப்ப்ட்டுள்ளன. விசேடமாக பாடசாலை அபிவிருத்தி செய்யப்படுவதுடன் இந்தப் பிரதேச அபிவிருத்தி செய்யப்படும். கல்வி இல்லையென்றால் எங்களால் வாழ்க்கை நடத்த முடியாது. கல்வியின் மூலம தான் ; எதிர்காலத்தை நோக்கிச் செல்ல முடியும். தங்களுடைய பாடசாலையிலும் கல்வி வளர்ச்சி உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இதில் பாடசாலை நிர்வாகக் கட்டிடம், தொழில் நுட்ப கூடம்,  அதிபர் விடுதி, நவீன வசதிகளுடனான தேநீர்ச் சாலை ஆகியவற்றுக்கான புதிய நான்கு கட்டிடடங்கள்  மாணவர்களின் பாவனைக்காக பிரதமரினால் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இராஜாங்க அமைச்சர் ஜே. சி அலவத்துவெல, மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் முஹம்ட ரிபாழ் உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

-இக்பால் அலி
No comments:

Post a Comment