மக்கள் விடுதலை முன்னணியினர் இம்முறை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கியிருப்பதானது எவ்வகையிலும் பெரமுனவைப் பாதிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
கடந்த பொதுத் தேர்தலில் 5.5 லட்ச வாக்குககளையும் மாகாண சபைத் தேர்தலில் 7 லட்சம் வாக்குகளையுமே ஜே.வி.பி எடுத்திருந்ததாகவும் அந்த 7 லட்சமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களித்திருந்ததாகவும் தெரிவிக்கின்ற அவர், இம்முறை தேர்தலில் அந்த வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி இழக்கும் எனவும் தெரிவிக்கிறார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரித்திருந்த ஜே.வி.பி இம்முறை தமது கட்சித் தலைவரை வேட்பாளராகக் களமிறக்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment