செச்னியா: ஐரோப்பாவின் மிகப் பெரிய பள்ளிவாசல் திறந்து வைப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 24 August 2019

செச்னியா: ஐரோப்பாவின் மிகப் பெரிய பள்ளிவாசல் திறந்து வைப்பு


ஐரோப்பாவின் மிகப் பெரிய பள்ளிவாசல் செச்னியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.'பக்ர் அல் முஸ்லிமீன்' (முஸ்லிம்களின் பெருமைக்குரிய தளம்) எனும் பெயரில் நேற்று வெள்ளிக்கிழமை குறித்த பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு சவுதி அரேபியா நிதியுதவியும் உதவிகளையும் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 30,000 பேரை உள்ளடக்கக்கூடிய வகையில் நான்கு பிரதான வாயில்கள் கொண்ட நவீன கட்டிடக் கலைத் தொழிநுட்பத்தில் குறித்த பள்ளிவாசல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதுவே ஐரோப்பாவில் அளவில் பெரியதும் அதேவேளை அழகானதுமான பள்ளிவாசல் எனவும் செச்னிய தலைவர் ரம்சான் தெரிவித்துள்ள அதேவேளை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் வாழ்த்துச் செய்தியும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment