கோட்டா வென்றால் உலகில் இரு முதற் பெண்மணிகள் அமெரிக்கர்கள்: ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Saturday 24 August 2019

கோட்டா வென்றால் உலகில் இரு முதற் பெண்மணிகள் அமெரிக்கர்கள்: ரஞ்சன்தப்பித் தவறியும் கோட்டாபே வென்றால் உலகில் இரு நாடுகளின் முதற்பெண்மணிகள் அமெரிக்க பிரஜைகளாக இருப்பார்கள் என தெரிவிக்கிறார் ரஞ்சன் ராமநாயக்க.ட்ரம்பின் மனைவி மெலனி போன்று, கோட்டாவின் மனைவி அனோமாவும் அமெரிக்க பிரஜை மாத்திரமன்றி தான் எப்போதும் அமெரிக்காவின் அரசியல் சாசனத்தைக் காப்பாற்றக் கடமைப்பட்டிருப்பதாக உறுதி மொழியெடுத்துள்ள ஒரு நபர் இலங்கையின் ஜனாதிபதியாகி இந்நாட்டின் இறையாண்மையை ஒரு போதும் பாதுகாக்கப் போவதில்லையென ரஞ்சன் மேலும் தெரிவிக்கிறார்.

அத்துடன் மஹிந்தவைத் தவிர கோட்டாவின் சகோதரர்கள் அவர்களது குடும்பங்கள், குழந்தைகள் எல்லோருமே அமெரிக்க பிரஜைகளாக இருக்கும் போது அவ்வாறு ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதியாவதை அனுமதிக்கக் கூடாது என ரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment