பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தான் இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி உறுப்பினர்களுக்கு விசேட விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இது குறித்து அவர் அபிப்பிராயம் வெளியிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
2010ல் பொது வேட்பாளராகக் களமிறங்கிய சரத் பொன்சேகா, அப்போது மஹிந்த ராஜபக்சவிடம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment