நல்லாட்சி என்ற பெயரை நடைமுறை அரசு கெடுத்து விட்டதாகத் தெரிவிக்கிறார் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச.
நேற்றைய தினம் இடம்பெற்ற இளைஞர் மாநாட்டில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், தாம் ஆட்சிக்கு வந்ததும் கல்வித்துறையில் அதிக முதலீடுகள் செய்யப்படும் எனவும், தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லையெனவும் தெரிவிக்கிறார்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று சில தினங்களில் தனது அரசியல் வரவு பற்றிய அறிவிப்பை கோட்டாபே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment