ஐ.நா விசேட அதிகாரி முஸ்லிம் விவகார அமைச்சுக்கு விஜயம் - sonakar.com

Post Top Ad

Monday 26 August 2019

ஐ.நா விசேட அதிகாரி முஸ்லிம் விவகார அமைச்சுக்கு விஜயம்



இலங்கை விஜயம் செய்திருக்கும் ஐ.நா சமய சுதந்திரத்துக்கான விசேட அறிக்கையாளர் அஹ்மட் சஹீட் முஸ்லிம் கலாச்சார திணைக்களம் விஜயம் செய்து அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்குப் பின்னர் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், சமய, கலாசார ரீதியிலான பாதிப்புகள் தொடர்பிலான விடயங்களை தொடர்பாகவும் தற்போது நிலவும் சமய நல்லிணக்கம் தொடர்பாகவும் இதன் போது ஐ.நா அதிகாரி கேட்டறிந்து கொண்டார்.

சமகால சம்பவங்கள் தொடர்பான தகவல்களை அவர்கள்  கேட்டறிந்து கொண்டதற்கு இணங்க இது தொடர்பான முழுத் தகவல்களையும் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சு இந்தக் குழுவினரிடம் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் ஹலீம் அவர்களுடைய அந்தரங்கச் செயலாளர்  எம். எச். ஏ. பாஹிம்  தெரிவித்தார். 

-இக்பால் அலி

No comments:

Post a Comment