மைத்ரி அணி கோட்டாபேயுடன் முக்கிய பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Monday 26 August 2019

மைத்ரி அணி கோட்டாபேயுடன் முக்கிய பேச்சுவார்த்தை


செப்டம்பர் 3ம் திகதி கட்சி மாநாட்டில் வைத்து இம்முறை ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக அக்கட்சி தெரிவித்து வரும் நிலையில் இன்றைய தினம் பிற்பகல் கோட்டாபே ராஜபக்சவுடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது.மைத்ரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென தெரிவித்து வருகின்ற போதிலும், சு.க தரப்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என கட்சியின் மஹிந்த அதிருப்தியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பெரும்பாலும், சு.க கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment