அம்பாறை மாவட்டம் பொத்துவில் களப்புக்கட்டு பகுதியில் மீனவரின் வலையில் 81 மி . மீட்டர் ரக மோட்டார் செல் குண்டுகள் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(25)மாலை அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் குறித்த மோட்டார் குண்டுகள் சிக்கியுள்ளன .
கருப்பு நிற பொலித்தீன் பை ஒன்றில் சுற்றி கட்டப்பட்டிருத்த நிலையில் குறித்த 3 குண்டுகளும் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment