நுவரெலியவில் வெடிபொருள் தயாரிப்பு பயிற்சி: நௌபரின் மகன்! - sonakar.com

Post Top Ad

Saturday 17 August 2019

நுவரெலியவில் வெடிபொருள் தயாரிப்பு பயிற்சி: நௌபரின் மகன்!தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டாவது தலைவர் நௌபர் மௌலவியென அறியப்படும் நபரின் புதல்வர் நேற்று கைதான நிலையில் குறித்த நபர் தாம் நுவரெலியவில் வெடிபொருள் தயாரிப்பு பயிற்சி பெற்றமையை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் இயங்கிய சஹ்ரான் குழுவினர் தீவிரவாத குழுவாக மாற்றம் பெற்று நுவரெலியாவில் ஆயுத பயிற்சி எடுத்துள்ளதாக பொலிசார் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில் சஹ்ரானுக்கு அடுத்த நிலை தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த நௌபரின் 16 வயது புதல்வரும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெரும்பாலும் அனைத்து தீவிரவாதிகளையும் கைது செய்து விட்டோம், இனி அவர்களுடன் தேநீர் அருந்தியவர்களையும் விட மாட்டோம் என அண்மையில் பிரதமர் ரணில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment