
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெரமுன வேட்பாளர் 65 லட்சம் வாக்குகளைப் பெறுவார் எனவும் அந்த இலக்கை நோக்கியே பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.
கோட்டாபே அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விடுவதற்காக மேற்கொண்ட விண்ணப்பம் இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில் அவரது தகைமை குறித்து கேள்வி நிலவுகிறது. எனினும், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் கோட்டாபே அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டு விட்டதாகவே தெரிவித்து வருகின்றனர்.
இச்சூழ்நிலையிலேயே கோட்டாபேவுக்கு 65 லட்சம் லாக்குகளைப் பெறும் இலக்கைக் கொண்டு தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பந்துல தெரிவிக்கின்றமையும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 57 லட்சம் வாக்குகளையே பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment