இக்கட்டான சூழ்நிலையில் கேரள முஸ்லிம்களின் முன் மாதிரி! - sonakar.com

Post Top Ad

Friday 16 August 2019

இக்கட்டான சூழ்நிலையில் கேரள முஸ்லிம்களின் முன் மாதிரி!கேரளாவில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அங்கு கடும் மழை வீழ்ச்சி, மண் சரிவு என இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்து வருகின்றன. 


மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை பகுதியில் மாத்திரம் 60க்கு மேற்பட்டோர் நிலச்சரிவில் புதையுண்டு உயிரிழந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்ட பிரேதங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முடியாத அளவிலேயே இருப்பதனால் அப்பகுதியிலேயே வைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. 

எனினும், அதற்கும் வழியின்றி அதிகாரிகள் தடுமாறிய நிலையில், அப்பகுதியில் இயங்கும் மஸ்ஜிதுல் முஜாஹிதீன் நிர்வாகம் முன் வந்து பள்ளிவாசலிலேயே தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதித்துள்ளது. இப்பின்னணியில் மீட்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனைக்குட்படுத்து அடுத்த நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேத எண்ணிக்கை அதிகரித்த போது பெண்கள் தொழும் அறையையும் இதற்கென திறந்து , பள்ளி நிர்வாகம் பெரும் ஒத்துழைப்பு வழங்கியதாக பிரதேச மக்கள் புகழாரம் சூட்டியுள்ளதுடன் இக்கட்டான சூழ்நிலையில் சமூகப் பற்றுடன் நடந்து கொண்ட முஸ்லிம்களின் நன்னடத்தை வெகுவான பாராட்டைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment