வெற்றியை நிர்ணயிக்கப் போகும் அந்த 40 லட்சம் பேர்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Sunday 25 August 2019

வெற்றியை நிர்ணயிக்கப் போகும் அந்த 40 லட்சம் பேர்: சம்பிக்கஎதிர்வரும் தேர்தலில் 2015 ஆம் ஆண்டு வாக்களிக்க முடியாத 10 இலட்சம் வாக்காளர்கள் இளைஞர் யுவதிகள் வாக்களிக்கவுள்ளனர். இந்தப் 10 இலட்சம் வாக்காளர்களுடன் கட்சிகளுக்கு ஆதரவளிக்காதவர்கள் 40 இலட்சம் பேர் இருக்கின்றார்கள். இந்த 40 இலட்சம் பேர் வாக்களிக்கும் பக்கம் தான் எதிர் வரும் தேர்தலில் ஜனாதிபதி வெற்றி பெறுவார். அதன் காரணமாக கட்சிகளுக்கு ஆதவாளர்கள் உள்ளது போன்று கட்சிகளுக்கு ஆதரவின்றி இருக்கும் இளைஞர்களுடைய அபிலாஷைகள் என்ன?  எதிர்பார்ப்பு என்ன ? அவர்களுக்கான வேலைத் திட்டம் என்ன என்பதை அறிந்து செய்யக் கூடியவர்கள் தான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி கொள்ள முடியும் நகர அபிவிருத்தி மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.அங்கும்புர நகரில்  மில்லியன் ரூபா 30. 3  செலவில் நிர்மாணிக்கப்பட்ட பேரூந்து நிலையத்தை மக்களின் பாவனைக்காக திறந்து வைத்து உரையாற்றும் போது நகர அபிவிருத்தி மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

தனதுரையில் மேலும் விளக்கமளித்த அவர்,  விசேடமாக உயிர் நீத்த ஏப்பரல் 21 ஆம் திகதி நடந்த குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் உடைந்து விழும், சமய முரண்பாடுகள் ஏற்படும், சமூகத்தில் குழப்பம் ஏற்படும் என்று நாட்டில் உலகிலும் அச்சம் இருந்தது. இவை எல்லாவற்றையும் இந்த அரசாங்கம் மாற்றியமைத்துள்ளது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 71 ல் நடைபெற்ற புரட்சி ஏப்ரல் 5 ஆம் திகதி ஒரு நாள் இடம்பெற்றது. விடுதலைப் புலிகளின் போராட்டம் 30  வருடம் நீடித்தது. அதே போன்று சஹ்ரானுடைய சம்பவத்தில்  ஒரு நாளில் அதிகளவில் மரணம் அடைந்தனர். இந்த மூன்றையும் எடுத்துக்  கொண்டால் மூன்று விதமான எண்ணக்கருக்களில் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்றுக்கும் மூன்று வகையில் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அதன் காரணமாக எமது பாதுகாப்பினர் பிரிவினர் முறையில்  இதை தடுத்து நிறுத்த முடியாது. பழைய முறையில்  பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. புதிய சவால்கள் உள்ளன.  தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேசிய சமாதானத்தை உருவாக்கவும் நாட்டை ஒரு நீதியின் கீழ் கொண்டு செல்லவும் புதிய மனிதர்கள் புதிய வேலைத் திட்டங்களுடன் புதிய முறையில் சிந்திக்க வேண்டும்.

அமைச்சர் ஹலீம் அவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் முஸ்லிம் விவாகம் விவாகரத்துச் சட்டம்  தொடர்பிலான புதிய நீதி விடயம் தொடர்பாக நீதி அமைச்சின் மூலம் கொண்டு வந்தார். இந்த நாட்டினுடைய சகல சமயத்துக்குள்ளது போன்று தேசிய ரீதியில் எல்லாம் இருக்க வேண்டும். அது எங்களுக்கு பிரச்சினை இல்லை. இஸ்லாமிய  நீதிக்கு உட்பட்டு அதே போன்று இலங்கை நீதித்துறைக்கு உட்பட்டு இந்த அரசாங்கம் யாருக்கும் மனம் நோகாமல் சவால்களுக்கு முகம் கொடுக்க ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஒரு பக்கம் அபிவிருத்தியைச் செய்து கொண்டு செல்லும் வேளையில் மறுபக்கம் மக்களுடைய சமய கலாசார நவடிக்கைகளைப் பாதுகாப்பது போன்று  எங்களுக்கு அவசியமானது எதிர் வரும் யுகத்திற்கு தேவையான தொழில் நுட்ப சமூகம். அப்படியான பெறுமதியான வேலைத் திட்டங்கள்  மிகவும் பெறுமதியான கூட்டமைப்பு அந்த பாதையில் கொண்டு செல்லக் கூடிய ஜனாதிபதி அபேட்சகரை நாட்டை ஆட்சி செய்யக் கூடிய குழுவினர் எதிர் வரும் நாட்களில் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முன்னுக் கொண்டு வருவோம். 

அந்த தீர்மானத்தை எடுக்கக் கூடிய தேர்தலுக்கு  வெற்றியின் பிற்பாடு எதிர் வரும் மார்ச் மாதம் இடம்பெறும் தேர்தலில் வெற்றியைப் பெற்று இந்நாட்டை 2025 ஆம் ஆண்டு வரையிலும் சக்தியுடன் புதிய நிர்வாகத்துடன் புதிய நாட்டுடன் குடும்ப ஆட்சிக்கு இடம் வழிவகுக்காமல் அதே போன்று உறவினருக்கு விரும்பியவாறு இடமளிக்காமல் வர்த்தகர்களுக்கு, கல் மண் வியாபாரிகளுக்கு . வேறு வழிகளில் வியாபாரம் செய்பவர்களுக்கு மது , போதைப் பொருள் வியாபாரிகளுக்கு பரிசுத்தமற்ற நிலையில் நாட்டை கட்டை எழுப்பக் கூடிய அறிவு சார்ந்த இளைஞர் யுவதிகளுக்கு நாட்டை முன்னோக்கிச் செல்லும் புதிய யுகத்திற்கு நாங்கள் எல்லோரும் அர்ப்பணப்புடன் செயலாற்றுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி


No comments:

Post a Comment