ராஜபக்ச குடும்பத்தை எதிர்த்து வெற்றி பெற்று, ஐக்கிய தேசியக் கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரே தலைவன் சஜித் பிரேமதாச என தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.
இன்று மாத்தறையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி பொதுக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், ரணிலின் வழி காட்டலில் - கரு ஜயசூரியவின் ஒத்துழைப்போடு சஜித் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனும் 65 வீத வாக்குகளைப் பெற்று 25 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதியொருவர் உருவாகவுள்ளதாகவும் மங்கள நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment