ஜனாதிபதி தேர்தலில் 'நான்' போட்டியிடுவதை தடுக்க முடியாது: சஜித் - sonakar.com

Post Top Ad

Friday 23 August 2019

ஜனாதிபதி தேர்தலில் 'நான்' போட்டியிடுவதை தடுக்க முடியாது: சஜித்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதியெனவும் அதை யாரும் தடுக்க முடியாது எனவும் தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.மங்கள சமரவீர தலைமையில் மாத்தறையில் இன்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்த அதேவேளை சஜித் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு ரணில் மற்றும் கரு ஜயசூரிய பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரமுன வேட்பாளராக கோட்டாபேவும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுர குமாரவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment