ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க சுயாதீன ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
தற்போது விசாரணை நடாத்திவரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு சுயாதீனமானதொரு குழுவில்லையெனவும் தம்மைச் சந்தித்த கத்தோலிக்க மத குருமார்களும் இதனையே வலியுறுத்தியுள்ளதாகவும் மஹிந்த தெரிவிக்கிறார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் விசாரணை நடாத்தியுள்ள அதேவேளை ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment