ஐக்கிய தேசியக் கட்சியோ பொது ஜன பெரமுனவோ களமிறக்கப் போகும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதில்லையென தெரிவிக்கும் ஜே.வி.பி தாமும் புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமது தரப்பு வேட்பாளரை எதிர்வரும் சில வாரங்களில் அறிவிக்கவுள்ளதாகவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக கருதப்படும் மைத்ரிபால சிறிசேனவும் தான் இன்னும் தீர்மானிக்கவில்லை தெரிவிக்கின்றமையும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்மானமொன்றை எட்டுவதற்கான முயற்சி இடம்பெற்று வருகின்றமையும் பெரமுன தரப்பு கோட்டாபே ராஜபக்சவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment