கொழும்பு ஸாஹிரா கல்லூரி ஸ்தாபகர் தின விழா - sonakar.com

Post Top Ad

Thursday 22 August 2019

கொழும்பு ஸாஹிரா கல்லூரி ஸ்தாபகர் தின விழாஇலங்கை முஸ்லிம்களின் முன்னோடிப்பாடசாலையான கொழும்பு ஸாஹிராக்கல்லூரின் ஸ்தாபகர் தினவிழா நேற்று மாலை  கல்லூரியின் அப்துல்கபூர் மண்டபத்தில்  அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவின் சிறப்பு பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஸப்ரி கலந்து கொண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் ஸாஹிராவின் பங்களிப்பு’ என்னும் தொணிப் பொருளில் உரையாற்றினார்..1892ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  கொழும்பு ஸாஹிராக்கல்லூரியின் உருவாக்கத்தில் ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ்,அரசி மரைக்கார், வாப்பிச்சி  மரைக்கார், எகிப்தைக் சேர்ந்த ஒராபி பாஷா ஆகியோரது பங்களிப்பு பிரதானமானதாகும்.127வருடங்களைத் தாண்டி கல்விப் பணியாற்றும் இலங்கையின் மிகப் பெரும் கல்வி ஸ்தாபனமான  இக் கல்லூரியில் 5400 மாணவர்கள் கல்வி  கற்பதுடன் 300 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றார்.

இதன்போது ஸ்தாபர்களுக்காக விஷேட துஆப் பிரார்த்தனையை ஹாரி பைஸல் வழங்கினார். ஸ்தாபகர்  தினம் தொடர்பாக பாடசாலையினால் நடாத்தப்பட்ட கட்டுரை, கவிதைப் போம்டிகளில் மூன்று மொழிகளிலும் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் அனுவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது பவுண்டர் தின தினம் தொடர்பான கவிதைப் போட்டிகளில் பங்குபற்றிய பாடசாலை ஆசிரியர்களான  செரோன் பெர்னாண்டோ, மின்ஸா மனாசிர், பர்ஷா ரூமி, மொஹமட் நபீல்,  ஆகியோருக்கு சான்றிதழ்களும், பணப்பரிசுகளும் விஷேட பேச்சாளரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விஷேட பேச்சாளருக்கு பாடசாலையின் நிறைவேற்றுக் குழுவின் தலைவர் பௌசுல் ஹமீடினால் விஷேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி கௌரவிக்கப் பட்டபட்டார். இதேவேளை பழைய மாணவரான மூத்த உறுப்பினர் பத்ரி ஹாசிம் விஷேட பேச்சாளருக்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், பிரதி அதிபர்களான ஆனந்தபெரும, றஸீன் ஹஸன், உதவி அதிபர்களான ஏ.எம்.மில்ஹார், ஹிஜாஸ் மொஹிடீன், எம்.ரி.ஏ.றவுப், பஸ்லின் பிரதௌஸ், ஆளுநர் சபை உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்விமான்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர். நன்றியுரையை தமிழ் பிரிவின் உதவி அதிபர் ஏ.எம்.மில்ஹார் வழங்கினார். 

-ஏ.எஸ்.எம்.ஜாவித்  

No comments:

Post a Comment