ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பெரமுனவுடன் கை கோர்த்தால் அவருக்கு உதவிப் பிரதமர் எனும் பதவியை உருவாக்கி வழங்க முடியும் என ஆலோசனை தெரிவித்துள்ளார் வாசுதேவ நானாயக்கார.
பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபே ராஜபக்ச வெல்வது உறுதியெனவும் யாருடைய தயவும் தேவையில்லையெனவும் வாசு - விமல் - கம்மன்பில தரப்பு தெரிவித்து வரும் நிலையில் மைத்ரிபால சிறிசேன இணைந்து கொண்டால் அவருக்கு அவ்வாறு ஒரு கௌரவமான பதவியை வழங்க முடியும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்துத் தாம் பெரமுன கூட்டத்தில் வைத்தும் பேசியிருப்பதாகவும் அதற்கு யாரும் எதிர்ப்பு வெளியிடவில்லையெனவும் வாசு தேவ மேலும் தெரவிக்கின்றமையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஒருவர் போட்டியிட்டே ஆக வேண்டும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment