முஸ்லிம் MPக்களின் இராஜினாமாவை உறுதி செய்து சுற்று நிருபம் - sonakar.com

Post Top Ad

Saturday 8 June 2019

முஸ்லிம் MPக்களின் இராஜினாமாவை உறுதி செய்து சுற்று நிருபம்


முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வழி விடும் நிமித்தம் இரு ஆளுனர்கள் உட்பட 11 பேர் பதவி விலகியிருந்த நிலையில் இன்றைய தினம் அமைச்சுப் பதவிகளைத் துறந்தமையை உறுதி செய்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.இதனடிப்படையில் ரவுப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஹலீம் ஆகியோர் ஜுன் 3ம் திகதியோடு அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ள அதேவேளை கபீர் ஹாஷிம் 4ம் திகதியுடன் தமது கபினட் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இராஜாங்க மற்றும் பிரதியமைச்சு பதவிகளிலிருந்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜுன் 3ம் திகதியோடு விலகியுள்ளமை இச்சுற்று நிருபம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment