
இலங்கை பௌத்த நாடுதான் என்பதை யாராலும் மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாது என்கிறார் அமைச்சர் பி. ஹரிசன்.
அநுராதபுரத்தில் சமர்த்தி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ள அதேவேளை, இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமான நாடில்லையெனவும் பல்லின மக்கள் வாழும் அதேவேளை பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடெனவும் அண்மையில் மங்கள சமரவீர தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
மங்களவின் கருத்தின் பின்னணியில் அவருக்கு கம்பஹா மற்றும் மாத்தறையில் பௌத்த பீடம் தடை விதித்துள்ள நிலையில் பி. ஹரிசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment