
கெகிராவ, திப்பட்டுவேவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரியுசன் வகுப்புக்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படும் 14 முதல் 16 வயது மாணவர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஏ9 வீதியை மறித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டதோடு அங்கு டயர் எரிப்பும் இடம்பெற்றுள்ளது.
கனரக வாகனம் ஒன்றினால் ஏற்பட்ட விபத்திலேயே இக்கோர மரணம் இடம்பெற்றுள்ளதோடு தப்பியோடிய 53 வயது சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment