
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரிசாத் பதியுதீன் மற்றும் சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எச்.எம் பௌசி உட்பட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வழி விடும் வகையில் ஒன்பது பேர் அமைச்சு பதவிகளையும் இருவர் தமது ஆளுனர் பதவிகளையும் இராஜினாமா செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மஹிந்த ராஜபக்சவை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment