ஜனாதிபதி நழுவி ஓடப் பார்க்கிறார்: JVP குற்றச்சாட்டு - sonakar.com

Post Top Ad

Monday, 10 June 2019

ஜனாதிபதி நழுவி ஓடப் பார்க்கிறார்: JVP குற்றச்சாட்டுநாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக தகவல்கள் வெளியாவதைத் தடுக்க முனையும் மைத்ரிபால சிறிசேன, தமது தவறுகளை மறைத்து நழுவி ஓடப் பார்க்கிறார் என தெரிவிக்கிறார் ஜே.வி.பி செயலாளர் டில்வின் சில்வா.நாடாளுமன்ற தெரிவுக்குழுவை கலைப்பதற்கான முயற்சிகளையும் ஜனாதிபதி மேற்கொள்ள முனைவதாக ஜே.வி.பியினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தலைவர் என்ற ரீதியில் தனக்குள்ள பொறுப்புகளிலிருந்து ஜனாதிபதி நழுவியோட முடியாது எனவும் ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய உண்மைகள் வெளியாக வேண்டும் எனவும் ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment