சிங்களத்தில் 'நல்லிணக்கம்' பேசி தமிழில் 'இனவாதம்' பேசுகிறார்கள்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Tuesday 11 June 2019

சிங்களத்தில் 'நல்லிணக்கம்' பேசி தமிழில் 'இனவாதம்' பேசுகிறார்கள்: மஹிந்தமுஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்களத்தில் நல்லிணக்கம் பேசிவிட்டு தமிழில் இனவாதம் பேசுவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.இன்றைய தினம் அவரது வீட்டில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், இன்றைய முஸ்லிம் தலைவர்கள் தனியாக முஸ்லிம் வாக்குகளிலேயே தங்கியிருப்பதால் தமிழில் தமது சமூகத்தினரிடம் இனவாதத்தை வளர்த்து விட்டு தேசிய மட்டத்தில் நல்லிணக்கம் பேசுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பதவி துறந்த அமைச்சர்கள் கூட்டாகச் சென்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்து விளக்கமளித்திருந்த அதேவேளை தற்சமயம் மஹிந்த தரப்போது இணைய வேண்டும் எனவும் சமூக மட்டத்தில் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment