நான் மட்டுமே லைசன்ஸ் உள்ள சாரதி: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Thursday 27 June 2019

நான் மட்டுமே லைசன்ஸ் உள்ள சாரதி: மைத்ரி


இரண்டு சாரதிகள் வாகனத்தை (அரசாங்கம்) செலுத்த முடியாது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தை விமர்சித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தனக்கு மட்டுமே 62 லட்சம் மக்கள் அதற்கான லைசன்ஸ் தந்ததாக தெரிவிக்கிறார்.


அந்த வகையில் தான் மாத்திரமே லைசன்ஸ் உள்ள சாரதியாக இருக்கின்ற போதிலும் நாடாளுமன்றிலே முன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து சாரதியாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும், பிழையான முடிவுகள் ஊடாக தவறான வழியில் நாட்டை வழி நடாத்திக் கொண்டிருப்பவருமே ரணில் என மைத்ரி மேலும் விளக்கமளித்துள்ளார்.

இப்பின்னணியில், யாரு எதிர்காலத்தில் அதிகாரத்துக்கு வந்தாலும் செய்ய வேண்டிய முதற் காரியம் 19ம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகும் என மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment