
குருநாகல மருத்துவர் ஷாபியை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விடுவிக்க முயற்சிப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் விமல் வீரவன்ச.
சந்தேகத்துக்குரிய வகையில் சொத்துக் குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஷாபிக்கு எதிராக சட்டவிரோத கருத்தடை குற்றச்சாட்டு பிரச்சாரப்படுத்தப்பட்டு சாட்சியங்கள் சோடிக்கப்படுவதாக நேற்றைய தினம் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் விமல் இவ்வாறு தெரிவிக்கிறார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ரிசாத் பதியுதீனை காப்பாற்றுவது போலவே ஷாபியையும் விடுவிக்க முயுல்வதாகவும் தேவையேற்படின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களையும் தம்மால் வெளியிட முடியும் எனவும் விமல் வீரவன்ச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment